லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 34 – 2024 -ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 24.08.2024 Ukasinfo 34-2024

வணக்கம்!

கோடைகால விடுமுறை மிகச்சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.

பாடசாலை 24.08.2024 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும்.

இக்கல்வியாண்டு 2024 / 2025 இல் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரையும் மகிழ்வோடு வரவேற்றுக்கொள்கின்றோம்.
கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமை போல் அனைத்து மாணவர்களும் பாடசாலையின் கீழ்கட்டிட நுழைவாயிலில் இருந்து அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் ஊடாக உள்வாங்கப்படுவர்.

புதிதாக இணையவிருக்கும் மாணவர்களை இணைப்பதற்கான படிவங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அப்படிவங்களை நிரப்பி அலுவலகப் பொறுப்பாளரிடம் வழங்கிய பின்பு தான் அவர்கள் வகுப்பறைகளில் இணைக்கப்படுவர்.

APTK innmeldingsskjema

பாடசாலை நேரம்:
-தொடக்கநிலை - மழலையர் - சிறுவர்நிலை 09:30-12:00
-1ம் வகுப்பு - 10ம் வகுப்பு வரை 09:30-12:30
-11ம் வகுப்பு 09:30-12:30
-கலைவகுப்புகள் (31.08.2024 தொடக்கம்) 12:45-13:45 சந்திப்பு விபரம் வகுப்பு வைபர்குழுமங்களில் அறிவிக்கப்படும்.

8 ஆம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு நேரத்தில் கைத்தொலைபேசி வைத்திருக்க அனுமதி இல்லை. வகுப்பு நேரத்தில் ஆசிரியரிடம் கைத்தொலைபேசி கொடுத்தல் வேண்டும். இடைவேளையில் மாணவர்களிடம் திருப்பி கொடுக்கப்படும்.

11ம் வகுப்பு அடுத்த கிழமை 31.08.2024 இருந்து ஆரம்பம்.

பெற்றோர்களுக்கான தகவல்கள் கூட்டம் 31.08.2024 மணி 11:20

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பம். (31.08.2024)

பாடப்புத்தகங்கள்
புத்தக விற்பனை காலை 9:45 மணிக்கு அலுவலகத்திற்கு அருகில் நடைபெறும்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்