- 23.10.26 வெள்ளிக்கிழமையும் , 24.10.26 சனிக்கிழமையும் வழமை போல் பாடசாலை நடைபெறும் .
- ஆண்டு 5 முதல் ஆண்டு 10 வரையான புதிய செயல் நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. செயல் நூலை பாடசாலை நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
- அன்பார்ந்த 5,6 ம் வகுப்பு பெற்றோர்களே, பெற்றோர் பிரதிநிதிகளே! எமது வளாகத்தில் 20/10/26 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாணிவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு பிரசாதம் ஒழுங்கு செய்து உதவிபுரிந்து, மற்றும் சகல உதவிகளையும் செய்த பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
- எமது வளாகத்தின் 35 வது கல்வியியற் போட்டிகளில் திருக்குறள் மனனப்போட்டி 11.2026 சனிக்கிழமை 13.00 மணிக்கு நடைபெறும். திருக்குறள் மனனப்போட்டிக்கான தாள்கள் மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை போட்டியில் பங்குபற்ற ஊக்குவிக்கவும்.
- திருக்குறள் மனனப்போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் தங்கள் பதிவுகளை தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி 10.26 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும். பதிவதற்கான link வகுப்புக் குழுக்களில் போடப்பட்டுள்ளது.

08.11.26 ஞாயிற்றுக்கிழமை அன்னை மாணவர்களின் கலைமாலை நிகழ்வும் , நிலாமுற்றம் நிகழ்வும் இடம்பெறும்.
இடம் – Frogner kultursenter நேரம் – 14.30 மணி
- 08.11.26 ஞாயிற்றுக்கிழமை அன்னை தமிழ்முற்றம் திருக்குறள் போட்டிகள் நடைபெறும்.
இடம் - தமிழர் வள ஆலோசனை மையம்
மாவீரர் ஓவியப்போட்டி 06.11.26 வெள்ளிக்கிழமையும் , 07.11.26 சனிக்கிழமையும் பாடசாலையில் வகுப்பு நேரத்தில் நடைபெறும்.
- 21.11.26 சனிக்கிழமை – 27.11.26 வெள்ளிக்கிழமை வரை மாவீரர் வாரம்.

கலை
- வகுப்புகள் வழமையான நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
இதுவரை பணவரவுத்தாள் (faktura) பெற்றவர்கள் கட்டணங்களைச் செலுத்தும்படி வேண்டுகின்றோம். ஏற்கனவே செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும். விவரம் தேவைப்படின் எம்மைத்தொடர்புகொள்ளவும். ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் வளாகப்பொறுப்பாளருடன் அல்லது அலுவலகத்தில் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
தொலைபேசி எண். 004755707045. நன்றி!
22.10.2026 நிருவாகம் - றொம்மன் வளாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.